கோட்டை போலே ரோட்டை இட்டு
கிராமத்தைப் பிரித்து
வளரும் இந்தியா.
விர்ர்…ரென .. அயல்நாடு போலே
பறக்கும் காரின் வேகத்தில்
பறக்கும் ஏழை கோவணம்
வளரும் இந்தியா.
தனக்குப் பிடித்ததை செய்தல் – தன்மானம், அது போய்
வெளிநாட்டிற்குப் பிடித்ததை செய்தலால் சன்மானம்
வளரும் இந்தியா.
வீட்டை விசாரித்து அண்ணாச்சி அனுப்பும் மளிகை போய்
அல்லல்பட்டு க்யூவில் நின்று பாக்கெட்டில் மளிகை
வளரும் இந்தியா.
முறுக்கு, வடை, குடும்பத்துடன் சினிமா போய்
கேர்ள்ஃபிரண்டுடன் பாப்கார்ன் பெப்ஸி!
வளரும் இந்தியா.
பதனி குடிக்க யோசித்து
பாக்கெட்டில் தண்ணீர்
வளரும் இந்தியா.
நிற்க இடமில்லை; பேச நேரமில்லை
செயற்கையாய் சிரிப்பு
வளரும் இந்தியா.
வெளிப் பேச்சில் ‘நியூட்ரீஷியஸ் டயட்’
வீட்டில் இல்லை சமையல்
வளரும் இந்தியா.
வளரும் இந்தியா இன்னும் வளரும்
வளர யெத்தனிக்கும் நாட்டைக் குழப்பி
தான் மட்டும் வளர எண்ணும்
வளரும் இந்தியா.
July 2, 2007 at 4:45 am
வாழ்த்துக்கள் சுப்பு!
அண்ணாச்சி.
July 3, 2007 at 7:09 pm
இணையதளத்தில் இணையச் செய்த
இனியவரே இயம்புகிறேன் நன்றி..
July 7, 2007 at 10:27 am
Subbu, yengiyo payochu…….. .
July 7, 2007 at 10:36 am
முஜீப், ஊக்குவிப்பிற்கு மிக்க நன்றி.