வாழ்க்கையே பாதையாகும்போது
வெற்றி இலக்கு எது?
பாதை ஓரம் பூக்கள் பூத்திருக்க
பூங்காவனம் வந்ததேன்?
பாதையை கடப்பதே அனுபவமாகில்
பற்றிக்கொள்ளும் குறிக்கோள் எதற்கு?
சுகமும் வலியும் தடையங்களானால்
வெற்றியில் மட்டும் நாட்டம் எதற்கு?
எண்ணி எண்ணி பார்த்தபோது
எளிமையாய் விளங்கியது
முந்திக்கொண்டு முன்னேற
முக்கியமானது குறிக்கோளே
சிந்தை கலங்கா சிரிப்புடன் வாழ
செயலுடன் பாதையை இரசித்தலே…
July 25, 2007 at 1:56 pm
[...] தொனியில சுப்பன் பாதை ன்னு ஒரு கவிதை போட்டிருக்கார்: [...]